Published : 19,Jul 2021 07:56 PM

"யுத்தம் வேண்டாம்; ஆப்கானிஸ்தானில் அரசியல் தீர்வு வேண்டும்" : தலிபான் தலைவர் உறுதி

Want-political-solution-in-Afghanistan--Taliban-chief-amid-conflict

ஆப்கானிஸ்தான் போருக்கு அரசியல் தீர்வு காண தங்களின் இயக்கம் உறுதிபூண்டுள்ளதாக தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதா தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தலிபான்கள் நடத்திவரும் தாக்குதலுக்கு இடையில் அந்த இயக்கத்தின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதாஇந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார்.ஆப்கானிஸ்தானின் பல மாவட்டங்களிலும் தற்போது தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் தோஹாவில் மீண்டும் தொடங்குகின்றன.

இது தொடர்பாக பேசிய அகுண்ட்சாதா"இராணுவபோராட்டத்தில் எங்களுக்கு முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தானில் ஒரு அரசியல் தீர்வுஏற்படஆதரவளிக்கிறோம். எங்கள் தலிபான் இயக்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது.வெளிநாட்டினரை நம்புவதற்குப் பதிலாக, நம்மிடையே உள்ள பிரச்சினைகளைநாமே தீர்த்துக் கொள்வோம், நிலவும் நெருக்கடியிலிருந்து நம் தாயகத்தை மீட்போம் என்பதுதான் எங்கள் செய்தி"என தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்