[X] Close

கோவை வனக் கல்லூரியில் வெட்டப்பட்ட மரங்களில் முறைகேடா? - அதிகாரிகள் விசாரணை

சுற்றுச்சூழல்

கோவை வனக்கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வனக்கல்லூரி வளாகம் அமைந்துள்ளது. இந்த வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய, மாநில வனத்துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மத்திய அரசு குத்தகைக்கு எடுத்திருக்கும் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பொது டெண்டர் விடப்படாமல் இந்த பகுதியில் உள்ள சந்தன மரங்கள், கருவேலம், வேங்கை உள்ளிட்ட மரவகைகள் டன் கணக்கில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அரசின் அனுமதி பெறாமலேயே இந்த மரங்கள் வெட்டப்பட்டிருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ள நிலையில், இதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதா என மாவட்ட வன அலுவலரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மரங்கள் வெட்டப்பட்டது குறித்து தனக்கு தெரியவில்லை எனக் கூறிய மாவட்ட வன அலுவலர், நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close