[X] Close

நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்

இந்தியா

Trinamool-Congress-MPs-cycle-to-Parliament-to-protest-fuel-price-hike
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
 
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் முதல் நாளான இன்று பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.
 
image
டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பதாகைகளை தங்கள் உடம்பில் கட்டியிருந்தனர். நாடாளுமன்ற நுழைவு வாயிலுக்கு வந்த அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இன்றைய கூடத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
[X] Close