[X] Close

சூர்யா பிறந்த நாளன்று 'சூர்யா 40' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா

The-first-look-of-his-40th-film-starring-Surya-will-be-released-on-the-22nd

சூர்யா நடிக்கும் அவரின் 40-வது படத்திற்கான முதல் பார்வை வரும் 22-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


Advertisement

'சூரரைப்போற்று' படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 26-ஆம் தேதி தொடங்கிய 'சூர்யா 40' படத்திற்கான படப்பிடிப்பு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் காரைக்குடியில் அந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் வருவதால், அதை கொண்டாடும் விதமாக சூர்யா 40 படத்திற்கான முதல் பார்வையை வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். அந்த முதல் பார்வையை கபிலன் என்பவரின் அணியினர் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close