[X] Close

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு

வணிகம்

Gold-which-has-been-selling-with-volatility-for-the-past-few-days-has-risen-in-price-today
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,546 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,542 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 32 ரூபாய் உயர்ந்து 36,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 
அதேநேரம் வெள்ளி விலை சற்று இறங்கியிருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.73.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.72.90 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement
[X] Close