[X] Close

பட்டியலின மணமகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த மாற்று சமூகத்தினர்!

இந்தியா

The-upper-castes-who-blocked-The-groom-from-the-list-who-tried-to-enter-the-temple-in-Madhya-Pradesh-State-of-India

பட்டியலின மணமகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த மாற்று சமூகத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் பகுதியில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின வகுப்பை சேர்ந்த புது மணமகனை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தடுத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் மணமகன் மற்றும் அவர்களது உறவினர்களை தாக்கியுள்ளார். 

தொடர்ந்து மணமகனின் தந்தை மான்பூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தங்களை கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்ததோடு, திருமண கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அதையடுத்து போலீசார் இந்திய தண்டனை சட்டம் 341, 323, 506, 153-A, 295-A மற்றும் 147 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் மண விழாவில் கலந்து கொண்ட நபர்கள் மது அருந்தி இருந்ததாகவும் கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இறுதியில் போலீசார் பாதுகாப்புடன் மண விழா மற்றும் பூஜைகள் கோயிலில் நடைபெற்றது. 


Advertisement

Advertisement
[X] Close