[X] Close

டெல்லி அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?: டி.ஆர்.பாலு விளக்கம்

வீடியோ ஸ்டோரி

டெல்லியில்  நடந்த அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று  திமுகவின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு விளக்கமளித்தார்


Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த இக்கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். இத்தொடரில் நீட், மேகதாது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தடுப்பூசி உள்ளிட்ட 12 பிரச்னைகள் குறித்து விவாதிக்க திமுக ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து டி.ஆர்.பாலு விளக்கமளித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close