[X] Close

காங். மாநில தலைவராக சித்துவை நியமிக்க பஞ்சாப் முதல்வர் கடும் எதிர்ப்பு

இந்தியா

Punjab-CM-opposes-to-have-Sidhu-as-a-Congress-state-president

காங்கிரஸ் தேசிய தலைமையின் ஆலோசனைப்படி நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தால் பிரச்னைகள் வெடிக்கும் என பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Advertisement

காங்கிரஸ் தேசிய தலைமையின் முடிவு குறித்து இன்று பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் மீண்டும் அம்ரிந்தர் சிங்குடன் ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சமீபத்தில் டெல்லியில் சந்தித்த சித்துவை காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தகவல் அளித்துள்ளனர்.


Advertisement

முக்கியமாக, சித்து அரசு நடவடிக்கைகளில் தலையிடக்கடாது என்றும், முன்பு தனக்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, சித்து தற்போதைய காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவரான சுனில் ஜாக்கருடன் சந்திப்பு நடத்தினார். பின்னர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்வர் அம்ரிந்தர் சிங் தலைமையில் போட்டியிடும் என்று கட்சியின் தேசிய தலைமை சமாதான செய்தி அனுப்பி உள்ளபோதிலும், சித்துவின் நியமனம் முதல்வர் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, சித்து நியமனம் குறித்து இறுதி முடிவு அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.


Advertisement

- கணபதி சுப்பிரமணியம்


Advertisement

Advertisement
[X] Close