Published : 05,Aug 2017 11:53 AM
அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் டிடிவி.தினகரன்: விஜயதரணி

அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் டிடிவி.தினகரன் இருப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தெரிவித்தார்.
சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி, "டிடிவி தினகரன் அதிமுகவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அது பாராட்டக் கூடிய ஒன்று. அதிமுக அடித்தளத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் டிடிவி தினகரன். அதனை வரவேற்கிறேன். அதிமுக-வை காப்பாற்றக் கூடிய இடத்தில் டிடிவி தினகரன்தான் இருக்கிறார். ஆகையால் அவரை அக்கட்சியிலுள்ள எல்லோரும் வரவேற்க வேண்டும் என்பதுதான் என் கருத்து" என தெரிவித்தார்.