[X] Close

வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தல்

விளையாட்டு

Indies-to-Another-Win-Clinch-T20-Series-Against-Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அசத்தியுள்ளது. 


Advertisement

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் மூன்று போட்டிகளை வெஸ்ட் இண்டீஸூம், 4 ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இந்நிலையில் இன்று 5 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. அந்த அணியில் எவின் லீவிஸ் அதிகபட்சமாக 34 பந்துகளில் 79 ரன்களை குவித்தார்.

image


Advertisement

இதனையடுத்து 20 ஓவரில் 200 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் ஆரோன் பின்ச் மட்டும் 34 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரல் மற்றும் ரசல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது.


Advertisement

Advertisement
[X] Close