[X] Close

அச்சமுள்ளவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் - ராகுல் காந்தி

இந்தியா

யதார்த்த நிலையையும், பாரதிய ஜனதாவையும் கண்டு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியுள்ளார். 


Advertisement

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களிடம் காணொலிமூலம் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸிற்கு வெளியே உள்ள தைரியமான தலைவர்கள் கட்சிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை என்றும். அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டிக்காட்டி இவ்வாறு ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close