[X] Close

’மிரட்டும் காளை முத்திரை’ : வெற்றிமாறன் - சூர்யாவின் ‘வாடிவாசல்’ டைட்டில் லுக் வெளியீடு

சினிமா

The-logo-and-title-look-for-Suriya--s-Vaadi-Vaasal

சூர்யா - வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது.


Advertisement

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி படம் இயக்கி வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்தப்பிறகு ‘வாடிவாசல்’ படத்தில் இணையவிருக்கிறார்கள். சூர்யாவின் பிறந்தநாள் அன்று ‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

தாணு தயாரிக்கும் ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா ரசிகர்கள் பலரும் வாடிவாசல் அப்டேட் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் தாணு.


Advertisement

image

இந்த நிலையில், இன்று ‘வாடிவாசல்’டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது. ’நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிறது. டைட்டில் லுக்கில் சீறும் காளையின் உருவில் நாணயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த காளையின் முத்திரையை சுற்றிலும் மனிதன், காளையின் கால் தடங்கள் இடம்பெற்றுள்ளன. இது காளைக்கும், மனிதனுக்கும் இடையிலான அந்த பிணைப்பை காட்டுகிறது. டைட்டில் லுக் முழுக்க கருப்பு நிறத்தில் உள்ளது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close