[X] Close

டி20 உலக கோப்பை சூப்பர் 12 : ஒரே குரூப்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்

விளையாட்டு

ICC-T20-Cricket-World-Cup-Groups-announced-by-the-Council-and-India-against-Pakistan-in-Group-2-of-the-Super-12-round

வரும் அக்டோபர் தொடங்கி நவம்பர் வரையில் துபாய் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 


Advertisement

சூப்பர் 12 சுற்றில் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்

சூப்பர் 12 சுற்று குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். 


Advertisement

image

குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். 

சூப்பர் 12 சுற்றுக்கு முன்னதாக தகுதி சுற்று இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. 


Advertisement

கடந்த 2019 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி விளையாடின. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close