மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சிக்குழு இன்று டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்தது. அதில் மேகதாது அணை மற்றும் தண்ணீர் பிரச்னை குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
டெல்லியில் ஜல்சக்திதுறை அமைச்சரை தமிழக அனைத்து கட்சிக் குழு சந்தித்த பின் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ’’மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை. மத்திய அரசின் நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை; மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறினார். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது’’ என்று கூறினார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அனைத்துக்கட்சி குழுவினரிடம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்