[X] Close

பக்ரீத் பண்டிகை: செஞ்சி வாரச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

வணிகம்

Bakreed-Festival-At-the-Chengi-Weekly-Market-Goats-sold-over-Rs-6-crores

செஞ்சி வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ரூ. 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்றது கருவாடு மற்றும் ஆட்டுச் சந்தை ஆகும். சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும், புதுவை, பெங்களுரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

image


Advertisement

வரும் 21-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் செஞ்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வாரச் சந்தைக்கு வந்து குவிந்தனர். அதற்கேற்றார்போல் கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

image

இதில், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும், ஆடி அமாவாசையொட்டி கருப்பு ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரையிலும் விற்பனையானது. இந்த வாரச் சந்தையில் மட்டும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் விற்பனைத் தொகை 6 கோடிக்கு மேல் இருக்கலாம் என உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close