Published : 05,Aug 2017 07:29 AM

லாரி-வேன் மோதல்: ஸ்பெயின் நாட்டினர் உடல் நசுங்கி பலி

Five-including-four-Spaniards-die-in-road-mishap-in-Chittoor

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கண்டய்னர் லாரி ஒன்று டெம்போ வேன் மீது மோதியதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஆனந்த்பூர் மாவட்டத்தின் பதலபள்ளியில் உள்ள அமைப்பு ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், ஒரு டெம்போ வேனில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வந்த வேன், இன்று காலை 10 மணிக்கு சித்தூர் மாவட்டம் எடலவங்கா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்