சூர்யா - செல்வராகவன் இணையும் படத்தில் நடிக்க நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் முடியும் நிலையில் உள்ளதையடுத்து அடுத்த படம் குறித்த செய்திக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சூர்யா-செல்வராகவன் கூட்டணி முதன்முறையாக கைகோர்க்கும் படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். படத்தில் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங், சூர்யாவுடம் விரைவில் சேர்ந்து நடிக்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
ரகுல் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக்தில் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கில் என இரு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. மேலும் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் நடித்த சில படங்கள் கைகொடுக்காத நிலையில் இந்த இரண்டு படங்களும் தனக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என்று நம்பியுள்ளார்.
மேலும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது இணையும் படத்திலும் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்