Published : 05,Aug 2017 07:03 AM

2018-ல் சென்னையில் ஜல்லிக்கட்டு

jallikattu-in-chennai-2018

அடுத்தாண்டு முதல் சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர் கூறியுள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகர், சென்னையில் அடுத்தாண்டு முதல் முறையாக கோவளம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக கூறிய அவர், 1000 வீரர்கள் 100 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்குபெற உள்ளதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டை பிரபலப்படுத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறந்த காளைகள் அதில் பங்கேற்க அழைத்து வரப்படும் என்றும் ராஜசேகர் தெரிவித்தார். அரசிடம் உரிய அனுமதி பெற்று இதை நடத்த உள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் சிறந்த காளைகள், சிறந்த மாடுப்பிடி வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.  சென்னையில் மாடுப்பிடி வீரர்கள் இருந்தால், அவர்கள் உரிய பரிசோதனை பின் விளையாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்க படுவார்கள் என்றும், பார்வையிடும் மக்கள், முன்பே ஆதார் அட்டை எண் அல்லது ஏதாவது அரசு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிந்துகொள்ளலாம் என்றும் ராஜசேகர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்