பூனைகள் மற்றும் நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டி, பட்டினிப்போட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
புனேவில் உள்ள முகமதுவாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்குள்ள வீடு ஒன்றில் இருந்து கடந்த 1-ம் தேதி பூனைகள் மற்றும் நாய்க்குட்டியின் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தது. அந்த வீடு ஜெனிபர் என்பவருக்குச் சொந்தமானது. வீடு பூட்டியிருந்தது. ஜெனிபரை பற்றிய தகவல் இல்லாததால் குடியிருப்பு வாசிகள் விலங்குகள் நல வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் உதவியுடன் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஓர் அறையில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மூன்று பூனைகளும் ஒரு நாய்க்குட்டியும் பரிதாபமாக விழித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை மீட்ட போலீசார், அங்கு ஓர் ஆமை இருந்ததை கண்டனர். பின்னர் ஜெனிபரை வரவழைத்து விசாரித்த போது, அதிர்ச்சி தகவல் வெளியானது.
கடந்த மாதம் 27-ம் தேதி வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு விட்டுக்குச் சென்றுவிட்டார் ஜெனிபர். இந்த செல்லப் பிராணிகளை கட்டிப்போட்டுவிட்டு சென்றதாக போலீசிடம் சொன்னார். மூன்று நாட்களாக பசியால் அந்த செல்லப் பிராணிகள் கத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெனிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள் நல அமைப்பிடமும், ஆமை, பாம்பு பண்ணையிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide