[X] Close

புதுக்கோட்டை: அடைகாத்த முட்டைகளுடன் மலைப்பாம்பை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

தமிழ்நாடு

Pudukottai-Youths-caught-a-mountain-snake-with-an-uncooked-egg-and-handed-it-over-to-the-police

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காட்டுப்பகுதியில் முட்டையுடன் அடைகாத்து இருந்த மலைப்பாம்பை பிடித்த அப்பகுதி மக்கள் அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பனங்குடி காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாறைக்குள் மலைப்பாம்பு ஒன்று பத்திற்கும் மேற்பட்ட முட்டைகளுடன் அடைகாத்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரின் உதவியோடு அந்தப் பாம்பை பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

image


Advertisement

சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் 10-க்கும் மேற்பட்ட முட்டையுடன் வந்த பொதுமக்களை பார்த்து முதலில் அச்சமடைந்த போலீசார் பின்பு வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த வனத் துறையினரிடம் அந்த பாம்பையும் முட்டையையும் ஒப்படைத்தனர். போலீசாரிடம் இருந்து மலைப்பாம்பு மற்றும் முட்டைகளை பெற்றக் கொண்ட வனத்துறையினர், அதை கொண்டு போய் நார்த்தாமலை காப்பு காட்டுக்குள் விட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close