Published : 05,Aug 2017 05:11 AM
வருண பகவானைச் சாந்தப்படுத்த 2 ஆண்களுக்குத் திருமணம்!

வருண பகவான் கருணை வைக்க வேண்டும் என்று ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மழை பொய்த்துவருகிறது. இதையடுத்து இந்தூரில் உள்ள ரமேஷ் சிங் தோமர் என்பவர், 2 ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்து வருண பகவானை சாந்தப்படுத்தினால் மழை பெய்யும் என்று நம்பினார். இதையடுத்து உள்ளூரில் உள்ள சக்காராம், ராகேஷ் என்பவர்களை மணமக்கள் ஆக்கினார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என மொத்தக் குடும்பமும் சூழ்ந்திருக்க, இந்து முறைப்படி புரோகிதர் மந்திரம் ஓத இவர்கள் திருமணம் நேற்று நடந்தது. இந்த வினோத திருமணம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.