[X] Close

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நாளை மறுதினம் ஆலோசனை

கல்வி

The-School-Education-Secretary-is-consulting-on-the-opening-of-schools-in-Tamil-Nadu

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து, அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நாளை மறுதினம் ஆலோசனை நடத்துகிறார்.


Advertisement

புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, நாளை மறுநாள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் ஆலோசனைக் கூட்டத்தில், ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் பங்கேற்கின்றனர். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close