Published : 14,Jul 2021 07:06 AM
சென்னை: ஒரு வாரத்துக்குப் பின் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் போடப்படாத நிலையில், ஒரு மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இது 2-ம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.