[X] Close

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

சினிமா

Sasikumar-new-movie-shooting-started-with-pooja-in-Chennai

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.


Advertisement

சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கி நடித்த சசிகுமார், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன. இந்த திரைப்படங்களுக்கான அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில் அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் நடிக்கிறார்.

image


Advertisement

image

இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தை சிங்கம்-2, மோகினி, தேவ் போன்ற புதிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சசிகுமார் நடிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்கிறார். அதேபோல் டி.இமான் இசையமைக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close