Published : 13,Jul 2021 05:52 PM
ஒரே நேரத்தில் குவிந்த மாணவர்கள் - தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கிய நீட் தேர்வு இணையதளம்

நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான இணையதளம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடங்கியது.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. மேலும், இன்று மாலை 5 மணியிலிருந்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு இணையதளம் செயல்படத் தொடங்கியதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால் இந்த இணையதளம் முடங்கியது.