[X] Close

மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைப்பு: எந்தெந்தக் குழுவில் யார் யார்?

இந்தியா

Centre-reconstitutes-Cabinet-committees-full-details

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை குழுக்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் யார் யார், எந்தெந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.


Advertisement

முக்கிய நியமனங்களை மேற்கொள்ளும் மத்திய அமைச்சரவைக் குழுவில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடம்பெற்றுள்ளனர்.

தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான திட்டங்களை நிர்வகிக்கும் மத்திய அமைச்சரவை குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவியல் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் இடம்பெற்றுள்ளார்.


Advertisement

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

image

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக் வால் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் மத்திய பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,


பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

image

முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் பியூஷ் கோயல் ஆகியோருடன் சிறு - குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண ராணி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதத்ய சிந்தியா, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரவை குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி, புபேந்தர் யாதவ் ஆகியோருடன் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஸ்டீல் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிரசாத், கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close