தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும் தமிழக பா.ஜ.க.-வின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கரு.நாகராஜன் அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த இரண்டு மனுக்களும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்த குழு செல்லும் எனவும், நீட் தேர்வு ஆய்வுக் குழு அமைத்தது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லை எனவும், மத்திய அரசு சட்டங்களுக்கு எதிரானதாகவும் நீட் ஆய்வுக் குழு அமைப்பு இல்லை எனவும் தெரிவித்து, கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.
Loading More post
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?