”பாக்ஸிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” - கவனம் ஈர்க்கும் 'சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர்

”பாக்ஸிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” - கவனம் ஈர்க்கும் 'சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர்
”பாக்ஸிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?” - கவனம் ஈர்க்கும் 'சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

‘காலா’ வெற்றிக்குப்பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் என்பதால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த எதிர்பார்ப்பை கூட்டுவதாய் அமைந்திருக்கிறது இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லர். ட்ரெய்லரில் ’நாமெல்லாம் ஒரு பரம்பரையா இருந்தோம். அதுக்கப்புறம் ரெண்டாச்சி. நாலாச்சி’, ’பாக்ஸிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா’ போன்ற வசனங்களிலும் 8 பேக் உடற்கட்டுடன் சண்டையிடும் ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கின்றனர்.

கடைசியில் ’போய் சொல்லுண்ணா. நான் யாருன்னு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது’ என்று ஆர்யா பேசுவது கவனம் ஈர்க்கின்றது. இன்று வெளியான ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். ’சார்பட்டா பரம்பரை’ வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com