[X] Close

தூத்துக்குடி: கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

தமிழ்நாடு

Thoothukudi-A-4-year-old-boy-drowned-while-playing-on-the-beach

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.


Advertisement

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவர் காலனியில் குடியிருக்கும் மீனவர் ரமேஷ் - மாரிச்செல்வி தம்பதியின் 4 வயது மகன் மாதவன், நேற்று கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

image


Advertisement

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை கடற்கரையில் சிறுவனின் உடல் கரை ஒதுங்கியதை அறிந்து அப்பகுதி மீனவர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி பார்த்தபோது அது மாதவனின் உடல் என தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் அங்கு சுற்றி நின்றவர்களை கண்கலங்க வைத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close