[X] Close

பெரம்பலூர்: காதலிக்க வற்புறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற சிறுமி: இளைஞர் போக்சோவில் கைது

குற்றம்

youth-arrested-by-pocso-in-perambalur

பெரம்பலூர் அருகே பத்தாம் ஆம் வகுப்பு பயிலும் மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Advertisement

பெரம்பலூர் அருகே நாவலூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் 15 வயது மகள் மேலப்புலியூர் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். விடுமுறையில் வீட்டில் இருக்கும் சிறுமியை மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணண்(19) என்ற கல்லூரி மாணவர் பின்தொடர்ந்து கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமி வீட்டில் இருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அந்த சிறுமி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும், மாணவியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த கல்லூரி மாணவர் முத்துக்கிருஷ்ணணை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

Advertisement
[X] Close