Published : 04,Aug 2017 04:51 PM

அதிமுக பொதுச் செயலாளரை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை

there-is-no-power-to-change-admk-general-Secretary-said-vetrivel

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து முடிவெடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை என டிடிவி தினகரனின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெற்றிவேல், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் இரட்டைஇலை சின்னம் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது. சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று மட்டுமே தேர்தல் ஆணையத்தால் முடிவெடுக்க முடியும். அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாதான் என்று கூறினார்.

முன்னதாக அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என இன்னும் முடிவு செய்யவில்லை என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்