Published : 11,Jul 2021 06:10 PM

வெளியானது வலிமை ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் - உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

Valimai-Motion-Poster-released

வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இரண்டாவது திரைப்படமான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் இயக்குநரான போனி கபூர் யூடிபூப் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, படத்தின் பெயர் வெளியானபிறகு ஃபர்ஸ்ட் லுக், புகைப்படம் என எதுவும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். அத்துடன் பல்வேறு பிரபலங்களிடமும்,  விளையாட்டு மைதானங்களிலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இதில் அஜித் வித்தியாசமான கெட் அப்பில் இருக்கிறார். மோஷன் போஸ்டரின் யுவனின் பின்னணி இசை வித்தியாசமாக உள்ளது. 'Power is a state of mind' என்ற வாசகம் மட்டும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது இந்த மோஷன் போஸ்டரில் தெரிகிறது. அதேபோல் சண்டைக் காட்சிகளும் அதிகம் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்