[X] Close

மக்களைப் பார்த்ததும் கோபத்தில் புழுதியைக் கிளப்பிய காட்டு யானை

வீடியோ ஸ்டோரி

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் தண்ணீர் தேடி வந்த காட்டு யானை, மக்களை கண்டதும் தரையில் காலை அழுத்தித் தேய்த்து புழுதியை கிளப்பி கோபத்தை வெளிப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது.


Advertisement

தண்ணீருக்காக வந்த யானையைப் பார்த்து ஆனைக்கட்டி சாலையில் சென்றவர்கள் மிரண்டுபோய் நின்றனர். தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானையை கண்காணித்தனர். அதே இடத்தில் யானை நின்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது மக்கள் கூட்டம் அதிகம் திரண்டதால், தண்ணீர் குடிக்காமல் யானை வனப்பகுதிக்குள் திரும்பியது. அதனைப் பின்தொடர்ந்து சென்றபோது யானை தரையில் காலை தேய்த்து புழுதியைக் கிளப்பியது.


Advertisement

Advertisement
[X] Close