அதிமுக தலைமைக்கழகம் எங்கள் வீடு போன்றது எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது அணிக்கு இன்று புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணத்தையும் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரு அணிகளும் இணைய கொடுத்த கெடு முடிவடைவதால் எப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து. அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் வீடு போன்றது. எங்களுக்கு கோவில்போன்றது. ஆகையால் எப்போது வேண்டுமானாலும் தலைமைக் கழகத்திற்கு செல்வேன்' என்று தெரிவித்தார்.
'நான் தலைமைக் கழகத்திற்கு செல்வதை தடுக்க எந்த காவல்துறைக்கும் அதிகாரமில்லை. எந்த சட்டத்திலும் அதற்கு இடமில்லை. எதிரிகளால் தலைமைக் கழகத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கலாம். சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் செயல்பட மாட்டார்கள்' என்றும் தினகரன் கூறினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!