Published : 10,Jul 2021 01:20 PM

’மாநாடு’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்கு ‘வாட்ச்’ பரிசளித்த சிலம்பரசன்

silambarasan-s----Maanaadu-shoot-is-finally-wrapped

‘மாநாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையொட்டி படக்குழுவினருக்கு நடிகர் சிலம்பரசன் படக்குழுவினருக்கு வாட்ச் பரிசளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

image

சமீபத்தில், இப்படத்தின் ’மெஹ்ரசைலா’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், விமானத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

image

தற்போது, ’மாநாடு’ படப்பிடிப்பு நேற்று நள்ளிரவில் முடிவடைந்ததையொட்டி தயாரிப்பாளர், சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்