Published : 04,Aug 2017 03:15 PM

கோடியக்காடில் உள்ள அரிய வகை மூலிகைகளை பாதுகாக்க வலியுறுத்தல்

chitha-doctors-asks-to-save-the-herbal-plants

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு மூலிகை வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை மூலிகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள பசுமை மாறாக்காடுகள் பகுதியில் சுமார் 252 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை வனம் அமைந்துள்ளது இங்குள்ள மூலிகை வனத்தில் 300க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகள் உள்ளன. இதில் 130 மூலிகைகள் சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் தற்போது டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிமாக உள்ள நிலையில் இந்த நோயை கட்டுபடுத்தக் கூடிய மிளகுசாரனை, சங்குஇலை, அவுரிவேர் ஆகியவற்றை பயன்படுத்தி கஷாயம் வைத்து அருந்தினால் நோய் முற்றிலும் குணமடையும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த பகுதியில் உள்ள முள்சீதாப்பழம், அம்மன்பச்சரிசி, சரக்கொன்னை ஆகிய மூலிகைகளை பயன்படுத்தி புற்று நோயை குணப்படுத்த முடியும் என்றும், மூட்டு வலியை போக்கும் முசுமுசுக்கை, உத்தாமணி, கைப்பாளை உள்ள அரிய வகை மூலிகைகளும் அங்கு அபரிமிதமாக கிடைக்கிறது என்கிறார்கள். இவ்வாறு பல நூறு அரிய மூலிகைச் செடிகள் தற்போது அழியும் தருவாயில் உள்ளன என்றும், இவற்றின் பயன்பாடு குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் உள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோடியக்காட்டில் உள்ள மூலிகை செடிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை பாதுகாக்கவும் தமிழ்நாடு வனத்துறைக்கு இயற்கை ஆர்வலர்களும், சித்த மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்