[X] Close

"பி.டி.எஃப் அல்ல பீஃப்...'' - நெட்ஃபிளிக்ஸ் தளத்தை சாடும் கேரள நெட்டிசன்கள்

சினிமா

controversy-over-Netflix-subtitles-beef-as-BDF-in-Namma-Stories-album

'நம்ம ஸ்டோரீஸ்' என்ற தென்னிந்திய மியூசிக் ஆல்பத்தின் 'பீஃப்' குறித்த மொழிபெயர்ப்பு சர்ச்சையை எதிர்கொண்டு வருகிறது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ்.


Advertisement

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் நேற்று தென்னிந்திய தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பப்பட்ட `நம்ம ஸ்டோரிஸ்' என்ற மியூஸிக்கல் ஆல்பத்தை வெளியிட்டது. இந்த ஆல்பம் தற்போது சர்ச்சையை சந்திக்கத் தொடங்கியுள்ளது.

image


Advertisement

`தென்னிந்திய கதைகளின் கொண்டாட்டம்' என்ற மையக்கருவை கொண்டு, தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் பிரபல ராப் பாடகர்களான அறிவு, நீரஜ் மாதவ், சிரி மற்றும் ஹனுமன்கிண்ட் ஆகியோரை கொண்டு இந்த ஆல்பம் தயாராகியுள்ளது.

இந்த ஆல்பத்தின் கடைசியில் மலையாள ராப் பாடகர் மற்றும் நடிகருமான நீரஜ் மாதவ் மலையாள பெருமைகளை பற்றி பாடும்போது ``நான் அதிகாலையில் பரோட்டா மற்றும் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்" என்று பாடுவார். இவரின் நிஜ வரிகளில் `பீஃப்' எனப் பதிவு செய்திருந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தனது ஆங்கில மொழிபெயர்ப்பில் பீப் (Beef) என்பதற்கு பதிலாக பி.டி.எஃப் (BDF) எனப் பயன்படுத்தியது.

இதையடுத்தே வடக்கு மாநிலங்களை கவனத்தில் கொண்டு மாட்டிறைச்சியை தைரியமாக வெளிப்படுத்த நெட்ஃபிளிக்ஸ் தயங்குகிறது என்று கேரளத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் பலரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.


Advertisement

image

பிரபல, மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் தனது ட்வீட்டில், ``நெட்ஃபிளிக்ஸ் இந்தியா, நீங்கள் மலையாள உரையாடல்களை வெளியிட முன், மாட்டிறைச்சியின் எழுத்துப் பிழைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். மாட்டிறைச்சியின் பெயர் B-E-E-F. சங்கிபோபியாவுடன் இங்கு வர வேண்டாம்" என்று காட்டமாக மாட்டிறைச்சியின் எழுத்துப் பிழைகளைக் கற்றுக்கொள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

இன்னொரு ட்விட்டர் பயனாரோ, ``பாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால் இதில் முரண்பாடு என்னவென்றால், தென்னிந்தியாவின் `வேற்றுமையில் ஒற்றுமையை' கொண்டாடும் ஒரு பாடலில் எல்லா மலையாளிகளும் விரும்பும் ஒரு பெயரைகூட தெளிவாக அந்த நிறுவனத்துக்கு கூற தைரியம் இல்லை" என்று நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவை கடுமையாக சாட்டியிருந்தார்.

இதேபோல் பலரால் இந்த விவகாரத்தை மையமாக வைத்து, ட்விட்டரில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்.


Advertisement

Advertisement
[X] Close