படப்பிடிப்பின்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா - நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மேக்கப் போட்டுக்கொண்டு வந்த பாலகிருஷ்ணா திடீரென தனது உதவியாளரை அருகில் அழைத்து ஓங்கி ஒரு அறை அறைந்தார். தனது காலில் இருந்த காலணிகளின் லேசை கட்டாமல் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததால் பாலகிருஷ்ணா தனது உதவியாளரை அடித்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாலகிருஷ்ணாவுக்கு இது 102வது படம். உதவியாளரை பாலகிருஷ்ணா அடித்தது குறித்து அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் விளக்கமளித்துள்ளார். அதில் ’கோவிலுக்குள் காட்சி படமாக்கப்பட இருந்தது. அந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாகவே தனது காலணியை கழட்ட வேண்டும் என தனது உதவியாளரிடம் பாலகிருஷ்ணா நினைவுபடுத்தி இருந்தார். அவர் ஷாட்டுக்கு தயாராகும் வரை உதவியாளர் அங்கு இல்லை. தான் நினைவுபடுத்தி இருந்தும் உதவியாளர் கண்டுகொள்ளாததால் அவரை அழைத்து லேசாக தட்டி தனது ஷூவை கழட்ட வேண்டும் என நினைவுபடுத்தினார். அந்த வீடியோ பரவி பாலகிருஷ்ணா மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விட்டது. மக்கள் யாரும் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்குவது இது முதல்முறையல்ல. பல படங்களின் படப்பிடிப்பின்போது சக நடிகர்கள், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்கியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பாலகிருஷ்ணா அக்கா ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியாவார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
பூந்தமல்லி: கழன்று தொங்கும் பேனர்கள்; விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!