[X] Close

விரைவுச் செய்திகள்: புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி | ஹைதி அதிபர் கொலை - 17 பேர் கைது

இந்தியா,தமிழ்நாடு

Tamilnadu--India--World-news-till-12-PM

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது: 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்று வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார்.

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்: கேரளாவில் கொரோனாவை தொடர்ந்து தமிழகத்தையும் ஜிகா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. தமிழக எல்லையோர பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல்: வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டுசெல்லப்பட்ட 144 கிலோ வெள்ளி மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொண்டாட்டமும் வாக்குவாதமும்: கரூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனுமதி பெறப்பட்டதா என காவல்துறையினர் கேட்டதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆட்சியர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆறுகளில் திடீர் வெள்ளம் - சாலை சேதம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆந்திராவுக்கு செல்லும் சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Advertisement

இரட்டை மடி வலைகளை பயன்படுத்த எதிர்ப்பு: ‌‌‌தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருப்பு கொடியுடன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புனித தலங்களில் குவிந்த மக்கள்: ஆனி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம், திருச்செந்தூரில் மக்கள் குவிந்தனர். கடற்கரையில் நீராடுவதை தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தண்ணீர் அளவு குறைந்ததால் வேதனை: கல்லணை கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் விவசாயம் மேற்கொள்ளமுடியவில்லை என விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கர்நாடாகவிலிருந்து காவிரி நீரை கேட்டுப்பெறவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விளைவுகளுக்கு சமூகவலைதளங்களே பொறுப்பு: சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளால் பிரச்னைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, அளிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

ஹைதி அதிபர் கொலை - 17 பேர் கைது: ஹைதியில் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிநாட்டு சதி அம்பலமானது. கொலம்பியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் நடைபெறும் டோக்கியோவில் அவசரநிலை: ஜப்பான் பிரதமர் சுகா டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம் செய்தார். ஒலிம்பிக் போட்டியின்போது பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என அறிவித்துள்ளார்.

விம்பிள்டன் இறுதியில் பார்டி, பிளிஸ்கோவா: விம்பிள்டன் டென்னிஸில் முதன்முறையாக இறுதிக்கு ஆஸ்லே பார்டி, கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் முன்னேறினர். சாம்பியன் பட்டத்திற்காக இருவரும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close