Published : 08,Jul 2021 10:26 PM

அதிகரிக்கும் கொரோனா: டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

Due-to-COVID19-Emergency-declared-by-Japan-spectators-not-allowed-to-witness-Tokyo-Olympics

ஜப்பான் தலைநகர் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது ஜப்பான் அரசு. அதனால் வரும் 23ஆம் தேதி டோக்கியோ நகரில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு நடத்திய ஆலோசனையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு அனைத்து போட்டிகளையும் பார்வையாளர்களின்றி நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனை டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் Seiko Hashimoto உறுதி செய்துள்ளார். “ஒலிம்பிக் போட்டிகளை காண முன்கூட்டியே டிக்கெட் வாங்கியவர்களுக்காக நான் வருந்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்