[X] Close

"என் தப்ப திருத்த வாய்ப்பு நீ தா" : கவனம் ஈர்க்கும் சிம்புவின் ’தப்பு பண்ணிட்டேன்’ பாடல்

சினிமா

silambarasan-s-thappu-pannitten-song-release

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ‘தப்பு பண்ணிட்டேன்’ இண்டிபெண்டண்ட் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement

’செல்வராகவன் – யுவன்’, ’விஷ்ணு வர்தன் – யுவன்’ கூட்டணி போன்றே ரசிகர்களிடமும் 90ஸ் கிட்ஸ்களிடமும் அதிகம் வரவேற்பைப் பெற்றக்கூட்டணி என்றால், அது சிம்பு – யுவன் கூட்டணிதான். யுவன் இசையில் ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ என அத்தனைப் படப்பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இப்போதும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பவை. இந்தக் கூட்டணி எப்போதும் கவனம் பெற சிம்பும் ஒரு நல்ல இசை ரசிகராக இருப்பது முக்கிய காரணம்.

சிம்பு படத்திற்கு யுவன் இசையமைத்தாலே அந்தப் படத்தில் ஒரு பாடலையாவது சிம்பு பாடுவார். இந்தப் பாடல்கள் ஒருபுறம் கொண்டாடப்பட்டது என்றால், யுவன் – சிம்பு போட்டிப்போட்டுக்கொண்டு பாடிய ’எவண்டி உன்ன பெத்தான்’ இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்தது. இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ‘வானம்’ படத்திற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளனர்.


Advertisement

இப்படத்தின், முதல்பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ’தப்பு பண்ணிட்டேன்’ பாடலில் சிம்பு இணைந்துள்ளார். சிம்பு பாட காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கேட்பதற்கு ’லூசு பெண்ணே’ பாடல்போல் இருக்கும் இப்பாடலை ரிப்பீட் மோடில் கேட்கிறோம் என்று கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close