மணிரத்னம் தயாரிக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது திரைப்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் டீசர் நாளை காலை 9:09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. இதில்,இடம்பெற்றுள்ள ஒன்பது படங்களின் தலைப்புகள் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
’கிடார் கம்பி மேலே நின்று’
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவும் பிரக்யா மார்டினும் நடித்துள்ளார்கள். காதல் கதை என்று சொல்லப்படுகிறது.
‘பாயாசம்’
வசந்த் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ரோகிணி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.
’சம்மர் ஆஃப் 92’
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
‘எதிரி’
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், நடிகை ரேவதி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.
‘பீஸ்’
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.
’ரெளத்திரம்’
நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.
’ப்ராஜெக்ட் அக்னி’
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா நடித்திருக்கிறார்கள்.
’இன்மை’
ரதிந்தீரன் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த் பார்வதி நடித்திருக்கிறார்கள்.
’துணிந்தபின்’
சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா முரளி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!