[X] Close

விரைவுச் செய்திகள்: கடத்தல் சிலைகள் - தமிழக அரசு | போதை ஊசி கும்பல் - தனிப்படை தேடல்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu--India--World-news-till-7-PM

கடத்தல் சிலைகளை மீட்க நடவடிக்கை: தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.


Advertisement

பத்திரப்பதிவு ஊழல் - உயர் நீதிமன்றம் உத்தரவு: பத்திரப் பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியிருக்கிறது.


Advertisement

போதை ஊசி கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள்: கோவையில் இளைஞர்களிடையே போதை ஊசி பயன்பாடு அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னைக்கு மாற்றம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகள் மதுரைக் கிளையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை - கொரோனா குறைந்த பின் முடிவு: கொரோனா முழுமையாக குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.


Advertisement

கொரோனா இறப்புக்கு உரிய சான்றிதழ் வழங்குக: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும்வகையில் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு 45 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

பாடப்புத்தகத்திலும் ஒன்றிய அரசு என மாற்றப்படும்: அரசு பாடப்புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என மாற்றப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்: தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு பாஜகதான் காரணம் எனக் கூறியது தனது சொந்த கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமளித்திருக்கிறார்.

ஆடிட்டரை கடத்திய 6 பேர் கைது: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 80 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக ஆடிட்டர் கடத்தப்பட்ட விவகாரத்தில் 6 பேரை கைது செய்து சென்னை காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

கூட்டாஞ்சோறு சமைக்கும்போது விபரீதம்-சிறுவன் பலி: திருச்சி அருகே சிறுவர்கள் கூட்டாஞ்சோறு சமைக்கும்போது அடுப்பில் சானிடைசர் ஊற்றியதால் தீ விபத்து ஏற்பட்டு 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சோகச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாண்டியனின் மனைவி மீதும் வழக்குப்பதிவு: 7 ஆண்டுகளில் சுமார் 7 கோடி ரூபாய் சொத்துகுவித்த முன்னாள் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் மனைவி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

8 வாரம் அவகாசம் கேட்கும் டிவிட்டர்: மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஏற்பது குறித்து முடிவெடுக்க 8 வாரம் அவகாசம் தேவை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடுக: யாழ்ப்பாணம் பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அடியெடுத்து வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதன் பேரில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. சிறிதரன் வலியுறுத்தி உள்ளார்.

ஜப்பானில் அவசரநிலை அறிவித்தார் பிரதமர் சுகா: ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் சுகா. டோக்கியோ ஒலிம்பிக் தொடங்க இருவாரங்களே உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்த மகேந்திரன்: மக்கள் நீதி மய்யத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.


Advertisement

Advertisement
[X] Close