[X] Close

சில்வர் ஓக் மரங்களை விற்க வனத்துறை முயற்சி: மு.க.ஸ்டாலின் கண்டனம்

MK-Stalin-condemned-Forest-Department-to-Sell-Silver-Oak-Trees

தனியார் மர வியாபாரிகளுடன் சிண்டிகேட் அமைத்து, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக கட்டுப்பாட்டில் உள்ள சில்வர் ஓக் மரங்களை குறைந்த விலைக்கு விற்க வனத்துறை முயற்சிக்கக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக பேரறிஞர் அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கு அதிமுக அரசு திரைமறைவில் இருந்தபடி திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், அரசு அதிகாரிகளும் இணைந்து இந்த திட்டத்தை வகுத்து கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், குதிரை பேர அதிமுக அரசின் இத்தகைய திட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தேயிலை தோட்டக் கழகத்தை சீரழித்துவிட்ட அதிமுக அரசை இலங்கையில் இருந்து திரும்பிய தமிழர்கள் மட்டுமின்றி, அதை நம்பி இருக்கும் பணியாளர்களும், மக்களும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close