[X] Close

கேஜிஎஃப் - 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

சினிமா

KGF-chapter-2-Film-Dream-Warrior-Pictures-captured-the-Tamil-release-rights

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.


Advertisement

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி 2018 இல் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இந்தப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தது. வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டிய திரைப்படம். மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் என தியேட்டர்களை அதிரச் செய்தன. 

‘கேஜிஎஃப் : சேப்டர் 2’ திரைப்படத்தில் நடிகர் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் வியூஸ்களை பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் இந்த பாகத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.


Advertisement

Advertisement
[X] Close