[X] Close

”தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழமுடியவில்லை”: கமல்ஹாசன்

சினிமா,தமிழ்நாடு

-I-am-not-happy-that-Tamil-Nadu-has-got-a-Union-Minister---Kamal-Haasan

”தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார், கமல்ஹாசன்.


Advertisement

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகனும் ஒருவர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும். ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close