[X] Close

தூதரக உறவுக்கு மரியாதை: சீன கொடியுடன் நாணயம் வெளியிட்ட இலங்கை

உலகம்

Honour-for-Diplomatic-Relations-Sri-Lanka-issues-coin-to-mark-centenary-celebration-of-Chinese-Communist-Party

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அந்நாட்டு கொடியுடன் கூடிய நாணயத்தை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் தூதரக உறவு ஏற்பட்டு 65 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதன் நினைவாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவை ஒட்டியும் 1000 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

image


Advertisement

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகள் இடம்பெற்றுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் 'சீன கம்யூனிஸ்ட் கட்சி' என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 500 தங்க நாணயங்களும், 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close