Published : 04,Aug 2017 09:09 AM
மெரினா சாலையில் ஒலி எழுப்பும் சிக்னல்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஒலி எழுப்பும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை தவிர்க்க உதவும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒலி எழுப்பும் சிக்னல் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் சாலையை கடந்து செல்வோருக்கு மிகவும் உதவும் வகையிலும், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் இவை உதவும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.