[X] Close

'காசேதான் கடவுளடா' திரைப்படம் ரீமேக் ஆகிறது

சினிமா

Retro-Tamil-fim-Kasethan-Kadavulada-to-be-remade

முத்துராமன் நடிப்பில் வெளியான 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்கிறார்.


Advertisement

1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. நகைச்சுவை வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர்.கண்ணன் தற்போது ரீமேக் செய்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

image


Advertisement

கதை விவாதத்தை முடித்து நாயகனை தேர்வு செய்த இயக்குநர், தற்போது நாயகியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளார். இதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ள பல நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இன்னும் நாயகி இறுதி செய்யப்படவில்லை. காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close