[X] Close

18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு

Meteorological-center-informed-rainfall-chances-in-18-districts-for-next-2-hours

சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Advertisement

ஏற்கெனவே கொடுக்கப்பட்ட வானிலை அறிக்கையில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

தற்போது உள் தமிழகத்தில் நிலவக்கூடிய மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானதுவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், தருமபுரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்தில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close